பிரிட்டனில் மீனவருக்கு அரியவகை நீலநிற லாப்ஸ்டர் கிடைத்த நிலையில் அவர் அதை பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் கடலிலேயே விட்டுள்ளார்.
பிரித்தானியாவில் Newlyn பகுதியை சேர்ந்தவர் Tom Lambourn(25). இவர் Penzance கடற்கரை நகரத்தில் மீன் பிடித்தல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் Tom Lambourn மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது மிகவும் அரிதான நீல நிற லாப்ஸ்டர் கிடைத்துள்ளது. இந்த அரியவகை லாப்ஸ்டரை பார்த்ததும் Tom Lambourn அதை பிடித்து புகைப்படம் எடுத்து உடனடியாக National Hatcheryயின் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். மேலும் National Hatcheryயின் அதிகாரிகள் இதுபோன்ற நீல நிற லாப்ஸ்டர் மிகவும் அரிதானவை என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து 2005ஆம் ஆண்டில் University of Connecticut-ன் பேராசிரியர் Ronald Christensen ஆய்வு செய்தபோது மரபணு குறைபாட்டின் விளைவாக லாப்ஸ்டர்கள் இது போன்ற நீல நிறத்தை பெறுகிறது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மீன்பிடி தொழிலாளர் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார். இத்தகைய நீலநிற லாப்ஸ்டர்கள் அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்றும் அதனால் அதை யாரும் சாப்பிடுவது இல்லை என்றும் நாட்டு மக்கள் நம்புகின்றனர்.