Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் இந்திரா நகர் பகுதியில் கூலி தொழிலாளியான  முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக முருகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக ஆற்றிற்கு  சென்றுள்ளார். அப்போது முருகன் ஏற்கனவே ஆற்றில் வைத்திருந்த வலையை எடுக்க சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |