Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீன்பிடி திருவிழா…. . போட்டியிட்டு மீன்களை பிடித்த மக்கள்….!!

கண்மாயில் அதிக தண்ணீர்  இருப்பதால் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டாம்புதூர் கிராமத்தில் மிலனிக் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில்  தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் அதிகமாக  இருக்கிறது. இதனால்  கிராமத்தில் உள்ள பொதுமக்கள்  சார்பில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில்  பிள்ளையார்பட்டி, காட்டாம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள், பெண்கள், வயதானோர் என  100-க்கும் மேற்பட்டவர்கள் வலை, சேலைகள் மற்றும் வேட்டிகளை வைத்து  ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர். அதன்பின்னர் பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |