கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்து அதை வைத்திருந்த படகுகளின் மீதும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் மீன் வளத்துறை அதிகாரிகள் சில படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர்.
மேலும் சில படகுகள் மற்றும் வலைகள் விடுவிக்கப்பட்டதாக சுருக்குமடி வலைக்கு எதிராக செயல்படும் மீனவர்கள் தரப்பினருக்கு தகவல் கிடைத்ததன் பெயரில் அவர்கள் நேற்று துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின் மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.