Categories
மாநில செய்திகள்

மீன்வள படிப்புகளில் சேர…. நாளை(ஜூலை 8) முதல் ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

மீன்வள படிப்புகளில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  B.F.Sc, B.Tech, BBA, B.Vovஉள்ளிட்ட 9 வகையான மீன்வள படிப்புகளில் உள்ள 345 இடங்களுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.  படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா ன்வளப் பல்கலைக்கழகத்தின் www.tnfu.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின்04365-240449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |