திருவள்ளூரில் சாப்பிட வந்த நபர் மீன் குழம்பில் மீன் இல்லாததால் ஊழியரிடம் வாக்குவாதம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல உணவு விடுதியில் சாப்பிட வந்த நபர் ஒருவர் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஊழியரிடம் மீன் குழம்பு எடுத்துவர கூறியுள்ளார். ஊழியரும் மீன் குழம்பு கொண்டுவந்து வைத்துள்ளார். அதை பார்த்த அந்த நபர் அவரிடம் மீன் குழம்பு இருக்கு அதில் ஏன் மீன் இல்லை என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த ஊழியர் நீண்ட நேரமானதால் மீன் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார். குடி போதையில் இருந்த அந்த நபர் ‘நான் பணம் கொடுத்து சாப்பிடுகிறேனே என்ன நல்லா கவனிக்க கூடாதா?” என்று அவர் ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.