சரியாக வேகாத ஒரு மீனை உண்டு ஒருவரின் கல்லீரல் முழுவதும் புழுக்களின் முட்டைகள் நிறைந்திருந்த எக்ஸ்ரே காட்சி அதிரவைத்துள்ளது.
சீனாவில் வசித்துவரும் Xie என்பவர் வயிறு வலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் கடுமையான காய்ச்சலும் ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவரது கல்லீரலில் மிகப் பெரிய கட்டி ஒன்று இருப்பதை பார்த்தனர். அந்த கட்டியை அகற்ற முயன்றபோது அது முடியாததால் அவரது கல்லீரலில் பாதியை வெட்டி எடுத்து விட்டனர்.
அந்த கட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அதற்குள் மின்சார பல்பு வடிவில் ஏராளமான புழுக்களின் முட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதை பற்றி Xie-ஐ விசாரிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட மீனொன்றை முழுவதும் வேகவைக்காமல் உண்டால் மட்டுமே அதன் சரியான சுவை கிடைக்கும் என்பதற்காக சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டார். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய அவரிடம் மீண்டும் இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.