எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் வசித்துவரும் குமரேசன்(40) என்பவருடைய நாட்டு படகில் அதே பகுதியை சேர்ந்த பாலு(47), ரெங்கதுரை(48), முத்துக்குமார்(32), பூபதி(32), மனோஜ்குமார்(25), கண்மாய்க்கரையான்(64) ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். இநிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி 6 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டுபடகையும் பறிமுதல் செய்து ம்மீனவர்களை இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் வருகின்ற 4ஆம் தேதி வரை 6 மீனவர்களையும் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து அதிகாரிகள் மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.