Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்சியில் சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுள்ள தோட்டத்து கிணற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளான். இதனையடுத்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். இதற்கிடையில் நீண்டநேரமாகியும் திலக் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி வந்தபோது திலக் கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |