குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் தாமஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நைனாகுளம் பகுதியில் இருக்கும் குளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பூதப்பாண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாமஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாமஸ் குளத்திற்கு மீன்பிடிக்க சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.