Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் கிணற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் நாகம்மாள் தோட்டம் மார்க்கபந்து வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு யாதிக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யாதிக் தனது நண்பர்களுடன் பாறைகாடு பகுதிக்கு சென்று அங்கிருக்கும் தோட்டத்து கிணற்றில் இறங்கி மீன் பிடித்துள்ளார். அப்போது யாதிக் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் சிறுவனை மீட்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை கைப்பற்றினர். அதன் பிறகு காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |