Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்….. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் துறை மீனவ கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் பனிதாசன் உள்பட 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 28 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பனிதாசன் எதிர்பாராதவிதமாக தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பனிதாசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |