Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. ராட்சத அலையால் நடந்த விபரீதம்….. பெரும் சோகம்…!!

படகுகள் மோதி கொண்டதால் மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மரமடி பகுதியில் மீனவரான ராசையன்(61) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் செல்வி(54) என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ராசையன் அதே பகுதியில் வசிக்கும் மிக்கேல் தாஸ், டென்னிஸ் ஆகிய 2 பேருடன் தனது சகோதரரான ஆல்பின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் ராட்சத அலை எழுந்து ராசையன் சென்ற படகு கரையை நோக்கி வந்த ராஜ் என்பவரது படகின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராசையனை சக மீனவர்கள் மீட்டு நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ராசையன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |