Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்த போது…. திடீரென மயங்கி விழுந்த மீனவர்…. பெரும் சோகம்…!!

விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் சர்ச் தெருவில் ஜஸ்டின்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 9-ஆம் தேதி 25 மீனவர்களுடன் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஜஸ்டின் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த ஜஸ்டினை சக மீனவர்கள் மீட்டு படகை கரைக்கு திருப்பினர். ஆனால் கரை சேர்வதற்குள் ஜஸ்டின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் ஜஸ்டினின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |