தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீஷ் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவரான அன்பரசு என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் கரையும் ஓரத்தில் அமர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 சிறுவர்களும் கால் தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.