புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அடைக்கன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தூண்டிலில் இருந்த கொக்கி அடைக்கனின் கையில் குத்தியது. அதனை எடுக்க முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அடைக்கனை மீட்டு மூக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அடைக்கனின் கையில் சிக்கியிருந்த தூண்டில் கொக்கியை அகற்றி சிகிச்சை அளித்தனர்.