Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதற்காக மறுக்கரைக்கு நீந்தி சென்ற நபர்…. 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்…. பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு கடந்த 31-ஆம் தேதி கஞ்சமலையூர் பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவரும், அவரது நண்பர் குமாரும் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்கப் போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார். அப்போது ஏரியின் நடுவே எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக சுப்பிரமணியின் உடலை தேடி வந்தனர். நேற்று 3-வது நாளாக தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுப்பிரமணியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |