Categories
லைப் ஸ்டைல்

மீன் பிரியர்களே… எந்த மீன் சாப்பிட்டா நல்லது தெரியுமா?… வாங்க பார்க்கலாம்…!!!

உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒரு முறை இந்த மீன் வகைகளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சைவ உணவுகளில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவையும் அவசியம் சாப்பிட வேண்டும். அதுவும் அசைவ உணவில் கோழி, ஆடு இறைச்சியை விட நெத்திலி மற்றும் மத்தி மீன்களை எடுத்துக் கொள்வதால் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

மீனில் உள்ள பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவை குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மீனில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், விட்டமின் E, செலினியம், போன்றவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை அளித்து, சரும பிரச்சனைகள் வருவதை தடுக்க உதவுகிறது.

பற்கள் மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுத்து, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் A சத்து மீனில் வளமாக நிறைந்துள்ளது. எனவே இது கண் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. நெத்திலி மீனில் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் இருப்பதால், இது உடல் எடையை குறைக்கிறது.

தொடர்ந்து மீன் சாப்பிட்டு வந்தால் அறிவாற்றல் அதிகரித்து, மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. ரத்த உறைவைக் குறைத்து, இருதய நோய், ஆஸ்துமா மற்றும் பக்கவாதம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பக் காலத்தில் மீன் சாப்பிடுவதால், குறைப் பிரசவத்தை தடுத்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யலாம். தொடர்ந்து மீன் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறைந்து, எலும்புத் தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவினால் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

Categories

Tech |