புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன் மார்க்கெட்டில் கொரோனா தொற்று விதிமுறையை கடைபிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விதிமுறையை கடைபிடிக்காத மக்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணல்மேல்குடியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வளத்துறை அதிகாரி கொண்ட குழுவினர் ஆய்வு செய்தபோது அங்கு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத மீன் கடை ஊழியர்கள் 10 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.