சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சரவணன் கணேசன், சரவணன் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் திருப்பத்தூர் மீன் மார்க்கெட் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 கடைகளில் கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை கிடங்கில் குழிதோண்டி புதைத்தனர். மேலும் 3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.