Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு…. நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா…!!

குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம் நகராட்சியின்  30 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அனிச்சம்பாளையம்.இந்தப் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் கல்யாணமண்டபம், மின்வாரிய அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் கவுன்சிலர் சத்தியவதிவீரா தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர் அனைவரும் ஒன்றுதிரண்டு மாவட்ட கலெக்டரிடம் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் சுரேந்திரஷாவிடமும் மனு கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று நகராட்சி அலுவலகம் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து போக செய்தார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |