நாகை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்கள் வலையில் முதலை மீன் ஒன்று சிக்கிக் கொண்டது.
இதனை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதலை மீனை வியப்புடன் பார்த்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு இருந்த ஒரு நபர் அந்த மீனின் சுவை எவ்வாறு இருக்கும் என்று அறிந்துகொள்வதற்காக அதை வாங்கிச் சென்றுள்ளார்.