Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மீன் வளர்க்கும் பழங்குடியினர் கவனத்திற்கு” வழங்கப்படும் மானிய உதவிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது  மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்தும், மீன் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தவும்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைப்போல் தற்போது  ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சிறிய  மற்றும் பெரிய அளவிலான தொட்டிகள் அமைத்து மறுசுழற்சி முறையில் மீன் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகள் அமைக்க 7.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு  நேரில் சென்று  விண்ணப்பங்களை பெற்று வருகின்ற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |