Categories
தேசிய செய்திகள்

மீன் வளர்ப்பு தொழில்…. இனி ரொம்ப ஈஸி…. புதிய வசதியை அறிமுகம் செய்த மத்திய அரசு….!!!!

நாடு முழுவதும் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் மீன் வளர்ப்பு தொழிலை வளர்த்து எடுப்பதற்காக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மீன் வளர்ப்பு தொழிலை செய்ய விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 2020- 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 20,050 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டது.

இந்த நிலையில் தற்போது வரை 7,242.90 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இத்திட்டத்திற்கான டாஷ்போர்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த டாஸ்போர்டு மூலமாக திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும். மேலும் திட்டத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் மாநிலத்தில் திட்டத்தில் வளர்ச்சியை கவனிக்கவும் இது உதவியாக இருக்கும். தகவல்களின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |