மீன் விற்றுவிட்டு வந்த மூதாட்டியை பேருந்தில் ஏற விடாமல் இறக்கி விட்ட சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டி மீன் விற்றுவிட்டு வந்துள்ளார். தான் ஊருக்குச் செல்லும் பேருந்து வந்ததும் அதில் ஏற முற்பட்டபோது அந்த பேருந்தின் நடத்துனர் “மீன் வித்துட்டா வர்ற? நாறும் இறங்கு இறங்கு” என்று கூறி அந்த மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக பேருந்தில் ஏறிய அவரை மீண்டும் இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி பேருந்து நிலையத்தில் அவரை திட்டி கொண்டே கூச்சலிட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Categories