Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”சமூகத்தில் அந்தஸ்து உயரும்”.. தொழிலில் போட்டிகள் குறையும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று சமூகத்தில் கிடைக்கின்ற அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்ப பிரச்சனையை சுமுகமான தீர்வு பெறும். இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். கூடுமானவரை கடன் கொடுத்தவரிடம் கோபமாக எதுவும் பேச வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு உங்களுக்கு கையில் மேல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும், உள்ளமும் உற்சாகமாக இருக்கும். ஆனால் நீங்கள் சோர்வாக காணப்படுவீர்கள். அதேபோல் பழைய பாக்கிகளை வசூல் செய்வதாக இருந்தால் அவர்களிடம் நீங்கள் கோபப்படாமல் பேசுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்ததுதான் காணப்படும். இன்று மாணவக் கண்மணிகள் எந்தவித அவசரம் இல்லாமல் பாடங்களைப் படியுங்கள், நிதானமாக செயல்படுங்கள்.

கூடுமானவரை தியானம் போன்றவையும் பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் கல்விக்கு ரொம்ப உதவியாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |