Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… லாபம் பெருகும்… ஆசிகள் பெறுவீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்கள்…!! இன்று சந்தோச வாய்ப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம் பூமியால் லாபம் உண்டாகும். இன்று  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும், திறமை வெளிப்படும், ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோரும் ஆதரவாக இருப்பார்கள். இன்று துன்பமும் தொல்லையும் நீங்கும், மனோ தைரியம் கூடும்.

உத்யோகஸ்தர்களுக்கு  கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். பெரியோர்களின் பரிபூரணமான ஆலோசனைகளையும் ஆசிகளையும் இன்று பெறுவீர்கள். இன்று தெய்வீக நம்பிக்கை கூடும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே நீடித்த அன்பு இருக்கும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |