Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசி… புதிய நண்பர்களை நம்ப வேண்டாம்…எதிர்பால் இனத்தவரால் லாபம் கிடைக்கும்…!

மீன ராசி அன்பர்களே… இன்று தனவரவு அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். பெற்றோர்களால் நன்மைகள் பல பெறுவீர்கள்.ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். கடல் கடந்து விவகாரங்கள் வெற்றியை கொடுக்கும்.உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கி தர வேண்டாம் பணத்திற்காக எந்தவித பொறுப்புகளையும் ஏற்க வேண்டாம் எப்பொழுதும் இதை கடைபிடியுங்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது அவர்கள் யாரென்று கொஞ்சம் விசாரித்து பின்னர் உதவிகளை மேற்கொள்ளுங்கள்.இப்பொழுது உதவி செய்வதே பாதகமாக ஆகி விடுகிறது அதனால் கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். அவசியமான பயணங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள்.புதிய நண்பர்களை ஓரளவிற்கு மேல் நம்ப வேண்டாம்.எதிர்பால் இனத்தவரால் லாபம் கிடைக்க கூடும்.

மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக் கூடும்.அதை நீங்கள் புரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும்.பணவரவு கூடும் லாபம் ஈட்டுவீர்கள்.சேமிப்பு உயரும் கடன் பிரச்சனை உள்ளவர்கள் கடன்கள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமில்லாமல் காதலர்கள் இன்று வாக்குவாதங்கள் இல்லாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் கடைபிடித்தால் நல்லது. திருமண முயற்சிகள் காதல் முடியும் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.

கறுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறம்

 

Categories

Tech |