Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசி… மற்றவர்கள் பிரச்சினையில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்…பணிகள் தடையின்றி நடக்கும்…

 

மீன ராசி அன்பர்களே…இன்று நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள் ஆகவே இருக்கும் பொருளாதார நிலையில் உயர்ந்த புதிய முயற்சிகளை ஈடுபடுவீர்கள்.நேற்று செய்யாமல் விடுபட்ட வேலைகள் ஒன்றே இன்று செய்து முடிப்பீர்கள்.இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கை கொடுக்கும்.எதிலும் கவனம் இருக்கட்டும்.

புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.பல விதத்திலும் புகழ் கூடும்.மற்றவர்கள் பிரச்சினையில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாகத்தான் இன்று செயல்பட வேண்டும்.ஆயுதம் நெருப்பு போன்றவற்றைக் கையாளும் பொழுது கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு கூடும்.சில முக்கிய முடிவுகளை மனைவியிடம் கேட்டு எடுப்பது நல்லது.பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள்.

காதலர்களுக்கு இன்று காதல் சிறப்பாகவே இருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செல்லும்.இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |