மீன ராசி நண்பர்களே …. இன்று தனவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உறவினர்கள் வழியில் கேட்க கூடும்.மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும் அதனால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.
வீடு பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதமாக வந்து சேரும். வாழ்க்கை துணையுடன் விவாதம் செய்ய வேண்டாம். கூடுமானவரை எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தயவுசெய்து தவிர்க்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனமாக உரையாடுங்கள் தயவுசெய்து கோபப்படாதீர்கள் அதேபோல அவர்களிடத்தில் எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். மிக முக்கியமாக பிரச்சனை நடக்கக் கூடிய இடங்களில் தயவு செய்து நீங்கள் நிற்க வேண்டாம்.யாருக்கும் பஞ்சாயத்துகளும் கருத்துக்களும் ஏதும் நீங்கள் சொல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பதே ரொம்ப சிறப்பாகும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெளிர் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் இளம் சிவப்பு