செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ் போடுகிறார்கள் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளார்.
அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, ரசிப்போம் சிரிப்போம். அரசியல் தலைவர்களாக இருந்தால் எல்லா மனிதர்களுமே உங்களை கிண்டல் பண்ணுவதற்கான உரிமைகள் இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாரும் என்னை புகழ வேண்டும், 100 பேர் கைதட்ட வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது.
அதனால் என்ன மீம்ஸ் போடுகிறார்களோ அதை சிரித்துக்கொண்டு…. இந்த காதில் வாங்கிக்கொண்டு அந்தக் காதில் விட்டு விடுவேன். மேலும் நன்றாக போட்டாலும், காமெடியாக போட்டாலும், மகிழ்ச்சியடைவேன். அதைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. மக்களுக்கு தெரியும், நாம் இங்கு அரசியல் வந்திருப்பது, பாரதிய ஜனதா கட்சி இங்கே இருப்பது, தமிழக மக்களுடைய நலன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.