நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது.அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பரிவு போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதை தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. எனினும் 2 மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவான நிலையில் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.