Categories
சினிமா

’மீரா மிதுன் கைது பெருமைக்குரியது’…. மீரா மிதுனை வம்புக்கிழுத்த சனம் ஷெட்டி…..!!!

விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் கேரளாவில் பதுங்கியிருந்த மீராமிதுனை கைது செய்த,சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று  சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், மீராவை கைது செய்தது குறித்து அவருடன் பிக் பாஸில் சக போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு காவல் துறையினர் மீரா மிதுனை கைது செய்த விஷயம் பெருமைக்குரிய ஒன்று. சைபர் கிரைம் காவல் துறையினர் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நாம் சகித்துக்கொண்ட அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |