முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுக்கள் கடந்த 6-ம் தேதி முதல் மாநகராட்சியின் 15 பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வானது கடந்த 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 2,340 பேரிடம் இருந்து அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.11,70,000 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில் 1,09,000 ரூபாயும், கோடம்பாக்கம் பகுதியில் 1,69,500 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது.