Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணிவது மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!!!

அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது என அறிவித்துள்ளது.

அமெரிக்காவின்  பல நகரங்களில் கொரோனாவின் பிஏ.2 வகையானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.  இந்த வகை தொற்று தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா  பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்வது  மற்றும் உயிரிழப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு முகக் கவசம் அணிவது தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் படி அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது வருகிற மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பொதுமக்கள் எந்த வகையிலான போக்குவரத்து (எடுத்துக்காட்டாக, விமானங்கள், ரெயில்கள், புறவழி பாதைகள், பேருந்துகள், டாக்சிக்கள், படகுகள், கப்பல்கள், டிராலிகள் மற்றும் கேபிள் கார்கள்) பயன்படுத்தினாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்போதோ அல்லது உள்நாட்டுக்குள்ளேயே பயணிக்கும்போதோ வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை மூடியிருக்கும்படியாக முக கவசம் அணிவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |