Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் கட்டாயம்…..  இந்த அரசாணையை ரத்து செய்யுங்க….. மனுதாரருக்கு சரியான பதிலடி கொடுத்த ஐகோர்ட்….!!!!

தமிழ்நாட்டில் முகம் கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நபருக்கு சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் முகம் கட்டாயம் போட வேண்டும் என்று சுகாதார துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் போதிய ஆய்வுகள் எதுவும் இன்றி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். அது மட்டும் இல்லாமல் மனுதாக்கல் செய்தவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |