மக்கள் முகக்கவசம் அணிதலை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல்வேறு நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளும் பின்பற்ற தமிழக அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், சமீப காலமாக மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற எந்த வழிமுறைகளையும் மக்கள் பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது.
திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முக கவசம் அணியாமல் பங்கேற்பதால் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவலை குறைப்பதற்கான நடவடிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும் குறிப்பாக சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் சிறப்பு கவனம் தேவை” எனவும் தெரிவித்துள்ளார்