Categories
தேசிய செய்திகள்

முகக்கவசம் போடு…. இல்லனா ரூ.1000 எடு – தெலங்கானா அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனாவை  கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |