Categories
மாநில செய்திகள்

முகக்கவச ஏற்றுமதிக்கான தடை நீக்கம் …!!

இந்தியாவில் இருந்து அனைத்து விதமான முகக்கவசங்களின் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் N95 உள்ளிட்ட பல்வேறு முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளின் தேவை அதிகரித்ததால் அவற்றின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது உள்நாட்டு சந்தையில் போதிய அளவுக்கு வரத்து இருப்பதாலும் அதிக அளவில் உற்பத்தி நடைபெறுவதாலும் அனைத்து விதமான முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குனராக ஜெனரல் முகக்கவசம் மற்றும் கவச உடைகளை வெளிநாடுகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதாலும் இதன் மூலம் உள்நாட்டு தொழில் உற்பத்தி மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |