Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்க…” இந்த ஒரு பொருள் போதும்”… ட்ரை பண்ணி பாருங்க..!!

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை  (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். 

1. கரும்புள்ளிகள் நீங்கும்

பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

2. சரும எரிச்சலை குறைக்கும்

பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளதால், இதனை சரும எச்சரிச்சலில் இருந்து விடுபட பயன்படுத்தலாம். சிறிதளவு பேக்கிங் சோடவினை நீருடன் மிக்ஸ் செய்து அதனை எரிச்சல் மிக்க பகுதியில் அப்ளை செய்து 5 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இதனால் எரிச்சல் குறைவதுடன் சருமம் மெருதுவாக இருப்பதையும் உணரமுடியும்.

3. வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை பராமரிக்கலாம்

வெயிலில் சுற்றிதிரிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பேக்கிங் சோடாவினை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவில் குளிர்ச்சி தன்மை நிறைந்திருப்பதால் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தில், தண்ணீருடன் பேக்கிங் சோடாவினை கலந்து பேஸ்ட் போல செய்து, அதனை பாதிப்புற்ற இடத்தில் அப்ளை செய்து பின்பு கழுவ வேண்டும்.

4. கருமையை போக்கும்

சூரிய ஒளியினால் நமது முகம், கை, கால்கள் ஆகியவை நிறங்கள் நிறமாற்றம் அடையக்கூடும். பலர் தங்களது முகத்தை விட, கைகள் கருமையாக இருப்பதை உணர்வார்கள். இதனை ஸ்கின் டேன் (Skin tan) என்கிறோம். உங்கள் உண்மையான நிறத்தை திரும்ப பெற, சிறிதளவு பேக்கிங் சோடா, தண்ணீர், வினிநகர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, நிறமாற்றம் அடைந்த இடத்தில் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்வதால், இந்த ஸ்கின் டேனில் இருந்து மீளலாம்.

5. பிளாக்ஹெட்ஸ்களை நீக்கும்

சிலருக்கு தங்களது மூக்கு பகுதிகளில் பிளாக்ஹெட்ஸ் அதிக அளவில் காணப்படும். பிளாக்ஹெட்ஸ் வரமால் தடுக்க, தண்ணீருடன் பேக்கிங் சோடா கலந்து பின்பு பிளாக் ஹெட்ஸ் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து பின்பு கழுவ வேண்டும்.

6. முகம் பொழிவுறும்

இயற்கையாகவே பேக்கிங் சோடாவிற்கு, அழுக்கினை நீக்கும் தன்மை உண்டு. இதனால் பேக்கிங் சோடா தண்ணீர் கலந்து அதனை மெதுவாக முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 2 நிமிடம் வரை மசாஜ் செய்த பின் முகத்தினை வெறும் நீரினால் கழுவ வேண்டும்

Categories

Tech |