முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்க செய்ய வேண்டியது என்ன என்று இப்பொது பார்க்கலாம்.
முகத்தில் பருக்கள் ஏற்படுவது இளம் வயதில் ஹார்மோன் மாறுபாடுகளால் உருவாவது சகஜமான விஷயம்தான். இந்த பருவத்தில் வரும் பருக்கள் குறித்து சரியாக நாம் எதையும் செய்யாமல் விட்டு விடுவதால் தழும்புகள் வந்து விடும். இதனை நீக்க கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிய முறையில் நீக்க முடியும். தற்போது என்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை -20 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 20 கிராம்
எலுமிச்சை – 1
கசகசா – 20 கிராம்
முதலில் இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை முகத்தில் பூசி இரண்டு மணி நேரம் கழித்து வெந்நீரால் கழுவி விடவேண்டும். 48 நாட்களுக்கு தொடர்ந்து பண்ண முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்கள் மறைந்துவிடும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் இதை பண்ணலாம். ஒரு சிலருக்கு மட்டுமே 48 நாட்களில் பலன் கிடைத்துவிடும். இதன் மூலம் பெண்களுக்கு மீசை வளர்வதும் குறைந்து விடும்.