Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள முடிகளை நீக்க… இத மட்டும் செஞ்சா போதும்…!!!

பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை தவிர்க்க இதனை செய்தால் இரண்டு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

பெண்கள் அனைவருக்கும் தங்களின் முக அழகு என்பது மிகவும் அவசியம். தங்களின் முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு க்ரீம்கள் மற்றும் பவுடர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அவ்வாறே முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை, ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்து, பின் முகத்தில் 15 முதல் 20 நிமிடம் நன்கு உலர வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை மிகவும் பாதுகாக்கும். இது பருக்கள் குறைந்து, நிறத்தை அதிகரிக்க உதவும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இதனை செய்து வந்தால் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை தவிர்க்கலாம்.

Categories

Tech |