பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது . தற்போது பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது .
மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ரோஷினி முகத்தில் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர் . ஆனால் அது உண்மையான காயங்கள் அல்ல பிரபல பத்திரிக்கை ஒன்றிற்காக ரோஷினி போட்ட மேக்கப் என்பது தெரியவந்துள்ளது.