விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, பாரதிகண்ணம்மா சீரியல் அகிலன், ரவீனா ரவி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Here we go, presenting the Second Look of #VeerameVaagaiSoodum
Teaser & Mesmerising Single from Yuvan coming soon #VVSFromDecember #VVS #VVSSecondLook pic.twitter.com/PgcA6aHDPK
— Vishal (@VishalKOfficial) September 10, 2021
விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரமே வாகை சூடும் படத்தின் மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் அதில் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.