Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் குழி குழியா இருக்கா… கவலைய விடுங்க இதை ட்ரை பண்ணுங்க …!!!

முகத்தின் குழியா இருக்கா கவலைய விடுங்க,இதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

அனைவருக்குமே நல்ல பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தற்காலிக தீர்வைக் காண்பதை விட, அதை எப்படி முழுமையாக சரிசெய்யலாம் என்று யோசிக்க வேண்டும். அதனை காணலாம்

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், திறந்துள்ள சருமத் துளைகள் சுருங்க ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் உள்ள குழிகள் தானாக மறைந்துவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :

ஆப்பிள் சீடர் வினிகரை சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் சருமத் துளைகளை சுருக்க முடியும். அதன் மூலம் முகத்தில் உள்ள குழி மறைய உதவும்.

முட்டை வெள்ளைக்கரு:

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை இறுக்க உதவுவதோடு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும்.

பப்பாளி:

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, முகத்தில் தடவி வரலாம் .ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாப்பைன் என்னும் நொதி, திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவி புரியும்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத் தோலின் உட்பகுதியால் முகத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். லுடீன் மற்றும் பொட்டாசியம், சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சியளிக்கும்.

Categories

Tech |