பூச்சிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்து பெண் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சந்திரமோகனின் மனைவி செல்வராணி என்பவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கடைக்குள் சென்று செல்வராணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி சத்தம் போட்டதால் அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை செல்வராணியின் முகத்தில் அடித்துள்ளார் அதன்பின் செல்வராணியை கீழே தள்ளிவிட்டு அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தப்பியோடிய அந்த பெண்ணை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். பின்னர் காவல்துறையினர் அவரிடம் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை மீட்டு செல்வராணியிடம் ஒப்படைத்துவிட்டனர்.