பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர்.
இந்நிலையில் ‘லிவ் லவ் லாஃப்’ என்ற அமைப்பை கர்நாடகா மற்றும் ஒடிசாவில் நடத்திவருகிறார் தீபிகா படுகோன். தற்போது தமிழ்நாட்டிலும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் நலனுக்காக திருவள்ளூரையடுத்த ஈக்காட்டில் இவ்வமைப்பை தொடங்கியிருக்கிறார். ‘மனநோய் பாதித்தவர்கள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த முயற்சிப்பதாக’ தீபிகா கூறியிருக்கிறார்.