Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் மேக்கப் போடுவதை நிறுத்திய நயன்…. என்ன காரணம் தெரியுமா….? செம ஷாக்கில் ரசிகர்கள்….!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் குழந்தைகள் தனக்கு முத்தம் கொடுக்கிறார்கள் என்பதற்காக நயன்தாரா முகத்தில் மேக்அப் போடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் மேக்அப் போடவில்லை என்றாலும் முன்பை விட தற்போது தான் அவர் மிக அழகாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அழகு என்பது மேக்அப்பில் இல்லை, அன்பிலும் தாய்மையிலும் இருக்கிறது என்று விக்னேஷ் சிவனின் இந்த பதிவு நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Categories

Tech |