Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தை பராமரிக்க… செய்ய வேண்டியது என்ன?

முகத்தை பராமரிக்க சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுபியில் காணலாம் :

வீட்டில் இருக்கும் பொருள்கள் எப்போதும் நன்மையை செய்ய கூடியவை. சருமம் இழந்த ஊட்டச்சத்தை திரும்ப பெறுவதற்கு ஒரே வழி மூலிகை தயாரிப்புகள் தான். இது எளிதாக வீட்டிலேயே கிடைக்கும் என்பதால் எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்தி கொள்ளலாம். அப்படி முகப்பருவுக்கு பயன்படுத்தும் பொருள்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

முகம் பரு :

முகப்பரு என்பது பருவ வயதை தாண்டிய அனைவருக்குமே இந்த பிரச்சனை உண்டாகிறது. இது எல்லா வயதிலும் வரக்கூடியது. முகப்பரு வரும்போது எளிதாக அதை கடந்துவிட தக்காளி போதும். தக்காளியை இரண்டாக நறுக்கி முகத்தில் மென்மையாக தேய்த்துவிடுங்கள். முகத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துவதால் முகப்பருக்கள் தீவிரமாகாமல் இருக்கும். வாரம் இரண்டு முறை இதை செய்துவந்தால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்க முடியும்.

கருவளையம் :

கருவளையம் வரும் வரை காத்திருந்து பிறகு சரிசெய்து கொள்ளலாம் என்று நினைத்தால் கருவளையம் மறைய நீண்ட காலம் பிடிக்கும். சமயங்களில் அது கண்களுக்கு கீழ் நிரந்தரமாகவே கருப்பு நிறத்தை உண்டாக்கிவிட செய்யும். இது வருவதற்கு முன்பு அல்லது வரும் போதே சரிசெய்துவிட உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கை வட்ட வடிவில் வெட்டி அதை பன்னீரில் நனைத்து கண்களுக்கு மேல், கருவளையமும் படும்படி வைக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் மறையும். சாதாரணமாகவே வாரம் ஒருமுறை இதை செய்துவந்தால் கருவளையம் வராமல் தடுக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

இளமை :

எல்லா வயதினருமே இதை செய்யலாம். இது சருமத்தில் விழும் சுருக்கங்களை தள்ளி வைக்கும். சரும சுருகங்கள் இல்லாமல் செய்யும். நெற்றி கோடுகளை வரவிடாது. இதற்கு அதிக செலவும் இல்லை. ஐந்து ரூபாய் முட்டை போதுமானது. முட்டையை உடைத்து உள்ளிருக்கும் வெள்ளை நிற கருவை மட்டும் எடுத்து அதில் நறுமணம் தரும் லாவண்டர் ஆயில் ஒரு சொட்டு விட்டு நன்றாக கலக்கி முகத்தில் கீழிருந்து மேலாக தடவ வேண்டும். முட்டை வாடை அடிக்காதவாறு லாவண்டர் சேர்த்திருப்பதால் 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊறவிட்டு பிறகு சாதாரணமான நீரில் கழுவினால் போதும். வாரம் ஒருமுறையாவது இதை செய்துவந்தால் வயதான தோற்றத்தை தள்ளிபோட முடியும்.

உதடு :

அழகான உதடுக்கு லிப்ஸ்டிக் மட்டுமே பயன்படாது. இயற்கையாகவே உதட்டின் பளபளப்பை பெற விரும்பினால் அதற்கு சில நிமிடங்கள் ஒதுக்கி பராமரிப்பு செய்ய வேண்டும். குறைந்தது உதடுகளில் இருக்கும் இறந்த செல்களை நீக்கவாது முயற்சிக்க வேண்டும். சர்க்கரை அல்லது ஓட்ஸ் பயன்படுத்தி உதட்டில் ஸ்க்ரப் செய்யலாம். தேனுடன் சர்க்கரை கலந்து பயன்படுத்தலாம். வெண்ணெய் அல்லது உதட்டுக்கு நெய் தடவுவதன் மூலமும் உதட்டை வழுவழுப்பாக வைத்திருக்க முடியும். மேற்கண்ட குறீப்புகள் எல்லாம் சரும பிரச்சனைகள் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் அல்ல, எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் செய்தால் இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

 

 

Categories

Tech |