Categories
மாநில செய்திகள்

முகநூலில் அத்துமீறிய இளைஞர்… பொதுமக்கள் ஆவேசம்…!!!

காரைக்கால் மாவட்டத்தில் அத்துமீறி கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் பகுதியில் மன்சூர் அழி கான் என்ற இளைஞர் வசித்து வருகிறார். அவர் அங்கு இருக்கும் கோயில்களில் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோக்களை அவர் முகநூலில் பகிர்ந்த சிலைகளைப் பற்றி இழிவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கடும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |